हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 11, 2019

‘வஜ்ராசன யோகா செய்யுங்கள்; விபத்தை தவிர்க்கலாம்’ – டிரைவர்களுக்கு உ.பி. அமைச்சர் அட்வைஸ்!!

டெல்லி – லக்னோ நெடுஞ்சாலையில் ஆக்ரா அருகே பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர்.

Advertisement
இந்தியா Edited by

டிரைவர்கள் தங்களது உடலை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Lucknow:

உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்த நிலையில் டிரைவர்கள் வஜ்ராசன யோகாவை செய்தால் முடிந்தளவு விபத்தை தவிர்க்கலாம் என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சுதந்திர தேவ் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.

டெல்லி – லக்னோ சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது ஆக்ரா அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். 18 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சுதந்திர தேவ் சிங் கூறியதாவது-

நான் ஒரு யோகா வீடியோவை பார்த்தேன். அதில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு வாகனத்தை டிரைவர்கள் ஓட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நன்றாக சாப்பிட்ட பின்னர் 20 நிமிடங்கள் வஜ்ராசன நிலையில் இருக்க வேண்டும். பின்னர் வாகனத்தை எடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement