हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 07, 2019

உ.பி முதலமைச்சரின் புதிய திட்டம்: பசு வளர்க்கும் பணியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும்.

Advertisement
இந்தியா Edited by

12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களிலும் அலைகின்றன. (AFP)

Lucknow:

உத்தர பிரதேசத்தில் பசுக்களின் நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் பசுக்களின் நலனுக்காகவும் முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் “2012 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மாநிலத்தில் 2.46 கோடி கால்நடைகள் இருக்கின்றன. இதில் 10 முதல் 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களிலும் அலைகின்றன.

இந்த கால்நடைகளைப் பராமரிப்பதற்கான அரசு சார்பில் 523 கோசாலைகள் செயல்படுகின்றன. இருப்பினும் சாலைகளில் அலையும் பசுக்களை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஒரு லட்சம் பசுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.பசுக்களை பராமரிக்க விரும்புவோ ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் பசுக்கள் தரப்படும். பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும்.

இதுபோல் ஒருவர் எத்தனை பசுக்களை வேண்டுமானாலும் சொந்தப் பராமரிப்பில் வளர்க்கலாம். விருப்பம் உள்ள விவசாயிகல் இந்த திட்டத்தில் இணையலாம். ஒவ்வொரு பசுவின் பராமரிப்புத் தொகையும் வளர்ப்பவரி வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ரூ. 109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

2019-20 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தில் கால்நடை வளர்ச்சி, பராமரிப்புகாக ரூ.600 கோடி ஒதுக்கியது. ஆனால் குழந்தைகளின் ஆரம்ப கல்வி, உயர்கல்வித் திட்டங்களுக்குச் சேர்த்தே ரூ. 500 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 600 கோடியில் ரூ. 250 கோடி பசுக்களுக்கான கோசாலைகளை கிராமப்புறங்களில் அமைக்கவும். ரூ. 200 கோடி நகர்ப்புறங்களில் கோசாலைகள் அமைக்கவும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement