This Article is From Dec 28, 2019

போராட்டக்காரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் - போராட்டத்தை ஒடுக்கியதை நியாயப்படுத்தும் யோகி ஆதித்யநாத்

மாநிலத்தில் உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறைத் தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வன்முறை மோதலில் 21 பேர் இறந்தனர். அவர்களில் பலர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர்.

Lucknow:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மீதான தனது அரசின் ஒடுக்குமுறையை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்களை நியாயப்படுத்தியிருப்பது ஒவ்வொரு போராட்டக்காரர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

“ஒவ்வொரு கலகக்காரரும் அதிர்ச்சியடைகிறார்கள். யோகி ஆதித்யநாத் அரசின் கண்டிப்பைக்கண்டு அனைவரும் மெளனமாகிவிட்டார்கள். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் எவரும் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வன்முறை போராட்டக்காரர்களும் அழுவார்கள். உத்தர பிரதேசத்தில் நடப்பது யோகி அரசாங்கம்” என்று முதலமைச்சர் அலுவலகம் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

#TheGreat_CMYogiஎன்ற ஹேஷ் டேக் பயன்படுத்தப்பட்டது. 

இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தின் மூலம் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து போராட்டம் வெடித்தது. வன்முறை மோதலில் 21 பேர் இறந்தனர். அவர்களில் பலர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். இருப்பினும் அரசு பிஜ்னூர் நிகழ்வைத் தவிர்த்து எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று மறுத்துவிட்டது.
 

"வன்முறையை நாடியவர்கள் மற்றும் சொத்துக்களை அழித்தவர்கள் இப்போது இழப்புகளுக்கு ஈடுசெய்ய வேண்டியிருக்கும்" என்று மற்றொரு ட்வீட் பதிவும் போடப்பட்டது. வன்முறை ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு ”உதாரணம்" என்று குறிப்பிட்டது.

மீரட்டில் இருந்து மட்டும் 148 பேரைக் கொண்ட 498 பேரை அடையாளம் கண்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் நஷ்ட ஈட்டைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ராம்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில்  சொத்துக்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று மாநில அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள இடங்களில் இருந்து 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.

சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நேரத்தில் யோகி ஆதித்யநாத்தின் ட்விட் பதிலாக வந்துள்ளது. "இந்த நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. நாட்டின் பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியானவை, ஆனால் உத்தரபிரதேச முதல்வர் வேண்டுமென்றே போராட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கச் செய்தார், மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தினார்," தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தி முகமையான ஏ.என்.ஐயிடம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறைத் தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

.