Read in English
This Article is From Dec 06, 2018

உ.பி.யில் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்தை சந்தித்தார் ஆதித்யநாத்

பசு பாதுகாப்பு கும்பலால் காவல் ஆய்வாளர் ஒருவர் சட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
இந்தியா

லக்னோவில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமாரின் குடும்பத்தை சந்தித்தார் முதல்வர் ஆதித்யநாத்

Lucknow:

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பசு பாதுகாப்பு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறியுள்ளார்.

புலந்த்சாகர் பகுதியில் கடந்த திங்களன்று பசுவும், கன்றுக் குட்டிகளும் வயலில் இறந்து கிடந்தன. இதைப்பார்த்தவர்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் தலைமையில் வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. மாறாக போலீசாரை பசுபாதுகாப்பு கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கத் தொடங்கினர். பின்னர் கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதன்பின்னர் அவர்களை நோக்கி போராட்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் ஆய்வாளர் சுபோத்குமாரின் மண்டை உடைந்தது ரத்தம் வழிந்தது. இதன்பின்னரும் ஏற்பட்ட வன்முறையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சுபோத் குமார் உயிரிழந்து கிடந்தார். அவரை தவிர்த்து 20 வயது இளைஞர் ஒருவரும் சுடப்பட்டு உயிரிழந்திருந்தார். 

Advertisement

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சுபோத் குமாரின் குடும்பத்தாரிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறியுள்ளார். சுபோத் குமாரின் மனைவி மற்றும் 2 மகன்கள் ஆகியோர் லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தனர். 

காவல் ஆய்வாளர் சுபோத் குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement