हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 28, 2019

ஏன் யோகியை முதல்வராக்கினோம்...? அமித் ஷா விளக்கம்

பாஜகவின் நோக்கம் அர்ப்பணிப்பு, விஸ்வாசம், கடின உழைப்புதான். இதற்காகவே பாஜக ஆதித்யநாத்தை முதல்வராக அமரவைக்கும் சரியான முடிவை எடுத்தது. அவரும் சரியென நிரூபித்துள்ளார் என்று அமித் ஷா பேசினார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • 2017 ஆம் ஆண்டு பாஜக அபார வெற்றி பெற்றது
  • யோகியை முதல்வராக்குவோம் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை
  • வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் அமித் ஷா பேசினார்
Lucknow:


பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா இன்று உத்திரபிரதேசத்திற்கு முதலமைச்சராக ஏன் யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்தது குறித்து விளக்கினார். 

இன்று லக்னோவில் ரூ, 65,000 கோடி மதிப்புள்ள திட்டத்தை தொடங்கி வைக்க  பூமி பூஜைவிழாவில் கலந்து கொள்ள வந்த அமித்ஷா உத்திர பிரதேசத்தில் கோயிலுக்கு தலைமை பூசாரியாக இருந்த ஒருவரை ஏன் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம் என்பது குறித்து பலருக்கும் குழப்பமாக இருக்கும். யோகி முதலமைச்சராக இருப்பார் என்று யாரும் நினைத்ததில்லை. ஒரு நகராட்சியின் தலைவராக கூட இல்லாதவரை ஏன் முதலமைச்சராக பரிந்துரைத்தோம் என்று பலர் கேட்கின்றனர். 

யோகி ஆதித்யநாத்துக்கு அனுபவம் குறைவு என்றாலும் வேலைக்கான நெறிமுறைகள் தெரிந்தவர் என்று கூறினார். பாஜகவின் நோக்கம் அர்ப்பணிப்பு, விஸ்வாசம், கடின உழைப்புதான். இதற்காகவே பாஜக ஆதித்யநாத்தை முதல்வராக அமரவைக்கும் சரியான முடிவை எடுத்தது. அவரும் சரியென நிரூபித்துள்ளார் என்று அமித் ஷா பேசினார். 

யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement