இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் லான்ஸ் நாயக் அகமதுவின் தந்தையை ராணுவ அதிகாரி கட்டித்தழுவும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது.
New Delhi: இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவு வீரர் லான்ஸ் நாயக் நஸிர் அகமது வாணி மற்றும் அவரது சக படையினர் தெற்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதையடுத்து அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பலம் வாய்ந்த ஆயுதங்களால் தாக்க துவங்கினர். ஆறு மணி நேர தாக்குதலில் லக்ஷர் எ தொய்பா மற்றும் ஹிஜ்புல் முயாஹிதின் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை நெருங்கும் போது புல்லட் துளைத்து இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அகமது உயிரிழந்தார்.
இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் லான்ஸ் நாயக் அகமதுவின் தந்தையை ராணுவ அதிகாரி கட்டித்தழுவும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது. அதில் "நீங்கள் தனி ஆள் அல்ல" என்ற வார்த்தையுடன் உள்ள அந்த ட்விட் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதனை 3000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
லான்ஸ் நாயக் வாணியின் இறுதி மரியாதை அவரது கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இதில் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.
சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர், "லான்ஸ் நாயக் அகமது ஆரம்பத்தில் போர் குணத்துடன் இருந்தார், பின்னர் அதை கைவிட்டு ராணுவ அதிகாரியானார்" கூறியுள்ளார்.
2007ம் ஆண்டு செனா பதக்கம் பெற்றார். 2004ல் 162 பெட்டாலியனில் இணைந்தார். இந்த வருட சுதந்திர தின விருதுக்காகவும் காத்திருந்தார்.
(With inputs from PTI)