বাংলায় পড়ুন
This Article is From Feb 13, 2019

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்! - முலாயம் சிங் கருத்தால் சர்ச்சை!

பாஜகவை எதிர்த்து மாயாவதியுடன் கைகோர்த்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், முலாயம் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
இந்தியா ,

Highlights

  • "Mulayam Singhji has given his blessings. I am very grateful": PM Modi
  • Rahul Gandhi said he disagreed but "he respects Mulayam Singh's opinion"
  • Mulayam Singh Yadav's supporters say the comment was made in jest
New Delhi:

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள் தான் என சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங், சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளான இன்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்; எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார். அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி முலாயம் சிங் கருத்திற்கு தலை வணங்குகிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது. முலாயம் சிங் வாழ்த்தை பெற்றதை பெருமையாக என்னுகிறேன் என்றார்.

Advertisement

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதில் உடன்பாடில்லை என்றும், இருப்பினும் முலாயம் கருத்தில் இருப்பினும் முலாயம் மீது மதிப்புள்ளதாகவும் அதனால் அவரது கருத்தை மதிக்கிறேன் என்றும் கூறினார்.

பாஜகவை எதிர்க்க மாயாவதியுடன் கைகோர்த்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ், மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது அவரது கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement
Advertisement