This Article is From Jul 12, 2020

படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

15 நொடிகள் மட்டும் உள்ளன...

படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைப் பார்க்க முடிந்ததா?

பொதுவாக மறைந்திருக்கும் பொருட்களை கண்டு பிடிப்பதில் எப்போதுமே சுவாரசியம் இருக்கம். அந்த வகையில் தற்போது இந்த புகைபடம் உங்கள் மூளைக்கு அதிக வேலையையும் கண் பார்வைகக்கான சவாலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு ட்விட்டர் பயனர் இலைகளின் குவியலின் படத்தைப் பகிர்ந்து, அதில் ஒரு பாம்பு மறைந்திருக்கின்றது என்றும், அதனை கண்டுபிடியுங்கள் என்றும் கூறியிருந்தார். படத்தில், உங்கள் முதல் பார்வையில், பழுப்பு நிற இலைகளால் மூடப்பட்டிருக்கும் நிலத்தில் இலைகளைத்தவிர வேறெதுவுமே இல்லையென மிக உறுதியாக நம்புவீர்கள். இருப்பினும், நீங்கள் கவனமாகப் பார்த்தால், இலைகளுக்கு இடையில் ஒரு சிறிய பாம்பு இருப்பதை அறிந்துக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் பார்க்கத் தொடங்குவதற்கு முன் உங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்ன கண்டுபிடிக்க தயாரா?

நீங்கள் பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா? இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம், நீங்கள் தனியாக இல்லை.

"நான் கைவிட்டேன், மற்றவர்களின் பதிலைப் பார்க்க வேண்டியிருந்தது" என்று கருத்துகள் பிரிவில் ஒருவர் எழுதினார்.

"யாராவது தயவுசெய்து அதை வட்டமிடுங்கள்" என்று மற்றொருவர் கேட்டுக்கொண்டார். 

விடை இதோ!

காப்பர்ஹெட்ஸ் என்பது வட அமெரிக்காவில் பொதுவாக காணப்படும் ஒரு விஷ பாம்பு வகை. பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் கூற்றுப்படி, காப்பர்ஹெட்ஸில் வெளிர்-பழுப்பு, அல்லது ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது. அவை இருண்ட பழுப்பு குறுக்கு பட்டைகள் மூலம் சிறப்பிக்கப்படுகின்றன. உலர்ந்த இலைகள் இந்த பாம்புகளுக்கு சரியான உருமறைப்பு செய்கிறது.

Click for more trending news


.