This Article is From Aug 20, 2020

எச்.ராஜாவின் ஆண்மை என்ன என்பது உங்களுக்கே தெரியும்: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிப்பது ஆண்மை செயலா?

Advertisement
தமிழ்நாடு Posted by

எச்.ராஜாவின் ஆண்மை என்ன என்பது உங்களுக்கே தெரியும்: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

எச்.ராஜாவின் ஆண்மை என்ன என்பது உங்களுக்கே தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவ தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், விநாயகர் சதூர்த்தி விழாவுக்காக பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து கொண்டாடுவதோ, ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதோ, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில்‌ கரைப்பதையோ அனுமதிக்க இயலாது. 

அதனால், பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தடையை மீறி விநாயகர் சிலை நிறுவப்பட்டு விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படும் என்றும் இந்து அமைப்புகள் தெரிவித்து வந்தன. 

இதனிடையே, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறி எடியூரப்பா அரசு ஆண்மையுள்ள அரசு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அதிமுக அரசை அவர் தரக்குறைவாக விமர்சித்து விட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. 

Advertisement

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், எச்.ராஜாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் நடப்பது ஆண்மையான அரசு தான். எச்.ராஜாவின் ஆண்மை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் போய் கூனி குறுகி மன்னிப்பு கேட்பது தான் ஆண்மையா?

ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிப்பது ஆண்மை செயலா? எச்.ராஜாவின் சொற்கள் அவருக்குத்தான் பொருந்தும். அதிமுக அரசை உரசிப்பார்ப்பதை எச்.ராஜா நிறுத்திக் கொள்வது நல்லது என்றார்.

Advertisement

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை, உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம், என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement