This Article is From Aug 10, 2019

ஸ்விட்ச் ஓட்டைக்குள்ளே ஏன் கைவிடக் கூடாது..?- இந்தப் பூனையின் பரிதாப நிலையைப் பாருங்க!

இந்த புகைப்படங்கள் கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது அது ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. 

ஸ்விட்ச் ஓட்டைக்குள்ளே ஏன் கைவிடக் கூடாது..?- இந்தப் பூனையின் பரிதாப நிலையைப் பாருங்க!

@owurakuwaa என்கிற ட்விட்டர் பயனர், ஒரு பூனையின் நான்கு படங்களைப் பகிர்ந்துள்ளார்.

‘அதீத ஆர்வம் நல்லதுக்கல்ல' என்று சொல்வது ஒரு பூனை விஷயத்தில் உண்மையாகியுள்ளது. @owurakuwaa என்கிற ட்விட்டர் பயனர், ஒரு பூனையின் நான்கு படங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும் அந்தப் பூனை, வீட்டில் இருக்கும் ஸ்விட்ச் ஓட்டைக்குள் கைவிடுவது தெரிகிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பூனைக்கு ஷாக் அடித்துள்ளது. இதனால், அதன் தலை முடிகள் நட்டுக் கொண்டு நிற்கின்றன (கார்டூன் படங்களில் வருவது போலவே…). இந்த நான்கு படங்களும் பலரை சிரிக்க வைத்துள்ளன. ட்விட்டர் பயனரின் போஸ்டும் படுவைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்கள் கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது அது ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. 

அந்த வைரல் போஸ்ட் கீழே:

மக்களின் ரியாக்‌ஷன்களைப் பாருங்கள்:

Click for more trending news


.