இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையாக கருதப்படாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளித்து வரும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்றும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி, திமுக, அதிமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையாக கருதப்படாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளித்து வரும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.