Read in English
This Article is From Jun 21, 2018

கால்பந்து வீரர்கள் மூலம் கர்ப்பமாகும் பெண்களுக்கு பரிசு - சர்ச்சையில் பர்கர் கிங்

உலகக் கோப்பையை முன்வைத்து ரஷ்யாவில் உள்ள பர்கர் கிங் உணவகம் வெளியிட்ட விளம்பரம் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post

Highlights

  • உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது
  • கர்பமாகும் ரஷ்ய பெண்களுக்கு 3 மில்லியன் ரூபல்கள் பரிசளிப்பதாக விளம்பரம்
  • எங்கள் ரஷ்ய குழு, வெளியிட்ட இந்த விளம்பரத்தை நீக்கிவிட்டோம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. இப்போது அது விஷயம் அல்ல. உலகக் கோப்பையை முன்வைத்து ரஷ்யாவில் உள்ள பர்கர் கிங் உணவகம் வெளியிட்ட விளம்பரம் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரஷ்யா வந்திருக்கும் நட்சத்திர வீரர்கள் மூலம் கர்பமாகும் ரஷ்ய பெண்களுக்கு 3 மில்லியன் ரூபல்கள் பரிசளிப்பதாக விளம்பரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தது பர்கர் கிங்.  மேலும், வாழ்நாள் முழுவதுக்குமான வூப்பர்ஸ் என்கிற சாக்கோலேட்டும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகின் தலைசிறந்த, கால்பந்தாட்டக்காரர்களின் ஜீன்களை, ரஷ்யாவில் தக்க வைத்துக் கொள்ளவும், ரஷ்யாவின் சிறப்பான கால்பந்தாட்ட எதிர்காலத்தையும் மனதில் வைத்து தான் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. செவ்வாய் காலை பதிவிடப்பட்ட இந்த விளம்பரம் அன்று இரவே நீக்கப்பட்டது. பர்கர் கிங் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. “அந்த விளம்பரத்தின் கருத்து முற்றிலும் தவறானது. எங்கள் ரஷ்ய குழு, வெளியிட்ட இந்த விளம்பரத்தை நீக்கிவிட்டோம். இந்த தவறுக்காக மன்னிப்பும் கோருகிறோம்” என்றது பர்கர் கிங் நிறுவனம்.

Advertisement
பர்கர் கிங்கின் ரஷ்ய கிளை,  இது போன்ற ஆபாசக் விளம்பரங்களை வெளியிடுவது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.  

(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement
Advertisement