Read in English
This Article is From Jul 09, 2019

13 வயதில் 135 புத்தகங்களை எழுதி சாதனை படைத்த சிறுவன்!! உலகளவில் பாராட்டு!

சிறுவன் மிரிகேந்திரா ராஜ் தனது 6-வயதில் புத்தகங்களை எழுத தொடங்கினார். அவரது தாயார் ஆசிரியையாக உள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

உலக அளவில் 4 விருதுகளை சிறுவன் ராஜ் பெற்றிருக்கிறார்.

Ayodhya:

13 வயதில் 135 புத்தகங்களை எழுதி உத்தரப்பிரதேச சிறுவன் மிரிகேந்திரா ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். வி.ஐ.பி.க்கள், முதல்வர் ஆதியத்நாத், ஆன்மிகம், தலைவர்களின் வரலாறு என பல பிரிவுகளில் ராஜ் புத்தகம் எழுதியுள்ளார். 

முதன்முறையாக தனது 6-வது வயதில் புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளார் இந்த குட்டி சாதனையாளர். அவருக்கு சர்வதேச அளவில் 4 விருதுகள் கிடைத்துள்ளன. 

இதுகுறித்து அவர் கூறும்போது, 'ராமாயணத்தின் வரும் 51 கதாப்பாத்திரங்களை நான் ஆய்வு செய்தேன். ஒவ்வொருவரையும் பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு புத்தகமும் சுமார் 25 முதல் 100 பக்கங்கள் வரை வரும். 

லண்டனில் செயல்பட்டு வரும் சாதனைக்கான உலக பல்கலைக் கழகம் எனக்கு விருது அளித்துள்ளது' என்றார். ராஜின் தாயார் தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். தந்தை அரசு ஊழியராக பணியாற்றுகிறார். 

Advertisement

எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் அதிகப்படியான நூல்களை எழுத வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்று ராஜ் கூறியுள்ளார். 

Advertisement