Elections 2019: ராகுல் எனது மதிப்பை சீர்குலைக்க நினைக்கிறார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
- ராகுல் என் மதிப்பை குலைப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்.
- ராகுல் ரஃபேல் குறித்து பிரதமர் மோடியை குற்றம்சாட்டி வருகிறார்.
Lucknow: ராகுல் காந்தியின் தந்தை, முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார் என பிரதமர் நரேந்திர மோடி ராகுலை கடுமையாக விமர்சித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் விவகாரத்தில் என்னை குற்றம்சாட்டி வருகிறார்.
உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிறக்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என ராகுல் ஒப்பிட்டு பிரதமர் மோடி கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
மேலும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
எனினும், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ராகுல் ஆட்சிக்கு வந்தால் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal