This Article is From Jul 10, 2018

மாற்றத்திற்கான இளைஞர்கள் கொண்டாட்டம்

புதுச்சேரி ட்ரஸ்ட் ஃபார் யூத் மற்றும் சைல்டு லீடர்ஷிப் நடத்தும் இளைஞர்கள் தின கொண்டாட்டம் ஆகஸ்டு 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது

மாற்றத்திற்கான இளைஞர்கள் கொண்டாட்டம்

புதுச்சேரி: உலக இளைஞர்கள் தினம் ஆண்டு தோறும், ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி ட்ரஸ்ட் ஃபார் யூத் மற்றும் சைல்டு லீடர்ஷிப் நடத்தும் இளைஞர்கள் தின கொண்டாட்டம் ஆகஸ்டு 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது.

ஆண்டு தோறும், புத்தக வெளியீடு, குறும்படம் வெளியீடு, சாதித்த இளைஞர்களுக்கு விருதுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, வையம்பட்டியை சேர்ந்த முத்துசுவாமி என்ற விவாசியியின் பாடல்களை “வாழ்க்கை 360” என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த வருடம், ‘இளைய சமுதாய மாற்றம்’ விருதுக்கு விண்ணபபம் தொடங்கியுள்ளது. சமூக மாற்றத்திற்கு பங்களித்த இளைஞர்களை கண்டறிந்து, விருது அளிக்கப்படுகிறது விருதுற்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள், ஜூலை 28க்குள் பதிவிட வேண்டும். www.tycl.org.in என்ற இணையத்தள முகவரிக்கு சென்று போட்டியாளர்களின் பெயர்களை பதிவு செய்யலாம்.

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் விருது பெறும் போட்டிக்கு பதிவிடலாம். சமூதாயத்திற்கு பங்களிக்கு வகையில், மாற்றங்களை விதைக்க உதவியாக இருந்த சாதனை இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும், இந்த ஆண்டு ‘ரதம்’ என்ற பெயரில் குறும்படம் வெளியிடப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி பெண், அவளது வாழ்க்கை கனவுக்ளை எதிர்கொள்ளும் பாதையை படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படமாக ‘ரதம்’ அமைந்த்துள்ளது.

.