This Article is From Dec 29, 2019

‘’இந்திய இளைஞர்கள் அராஜகப் போக்கை வெறுக்கின்றனர்’’ – மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு!!

இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறையில் இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள மோடி, அது சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘’இந்திய இளைஞர்கள் அராஜகப் போக்கை வெறுக்கின்றனர்’’ – மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு!!

2019-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் உரையை இன்று பேசியுள்ளார்.

New Delhi:

தனது மன் கி பாத் உரையில் இந்திய ஆட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை வைத்துள்ளதற்காக இளைஞர்களை புகழ்ந்துள்ள பிரதமர் மோடி, அமைப்பு சரியான முறையில் செயல்படவில்லை என்று கருதினால் அதுகுறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என பொருள்படும் மன் கி பாத் உரையை ஆற்றி வருகிறார். இது தொலைக்காட்சி, ரேடியோக்களில் நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் உரையை இன்று பேசினார். இதில் இந்திய இளைஞர்கள் அராஜகப் போக்கு, சீரற்ற தன்மை, சாதியம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விரும்பவில்லை என்று அவர்களை பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில்,  கூறியிருப்பதாவது-

நமது இளைஞர்கள் இந்தியாவின் ஆட்சியமைப்பு முறையில் நம்பிக்கை வைத்துள்ளனர். அது சரியாக செயல்படவில்லை என்பதை உணர்ந்தால் அதுகுறித்து இந்திய இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இதனை ஓர் நல்ல பண்பாக நான் கருதுகிறேன்.

நம்முடைய இளைஞர்கள் அராஜகப் போக்கையும், ஆட்சி நிலையற்ற தன்மையையும் வெறுக்கின்றனர். சாதியம், குடும்ப ஆதிக்கம் உள்ளிட்டவற்றை அவர்கள் விரும்பவில்லை. இனி வரும் பத்தாண்டுகளில் நவீன இந்தியாவை உருவாக்குவதில் இந்திய இளைஞர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

இதேபோன்று, பொதுமக்கள் அவரவர் உள்ளூரில் தயாராகும் பொருட்களை வாங்கி வர்த்தகத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக குறிப்பிட்ட மோடி, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல்வேறு புதிய சாதனைகளை இந்த கூட்டத் தொடர் படைத்ததாக புகழாரம் சூட்டினார்.

.