நாராயண ரெட்டி அவரது 'Grandpa Kitchen' யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
தனது 'Grandpa Kitchen' யூடியூப் சேனல் மூலம் மிகப்பெரிய அளவில் உணவுகளை சமைத்து வந்த பிரபல YouTube தாத்தா நாராயண ரெட்டி, தனது 73வது வயதில் மரணமடைந்துள்ளார்.
தெலங்கானாவை சேர்ந்த நாராயண ரெட்டி கடந்த 27ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது கிராமத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் யூடியூப்பில் அஞ்சலி வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது 6 மில்லியன் subscribers-க்கும் தகவல் தெரிவித்தனர்.
அந்த வீடியோவில், நீங்கள் என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்வீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனது யூடியூப் சேனலில் மாபெரும் அளவில் உணவுகளை சமைப்பதன் மூலம் பெரும் புகழ் பெற்றார் நாராயண ரெட்டி. தொடர்ந்து, அந்த உணவுகளை ஆதரவற்றவர்கள் இல்லத்திற்கும் விநியோகித்து வந்தார். இதுதொடர்பாக Grandpa Kitchen குழு பேட்ரியானில் கூறும்போது, நாங்கள் உணவுகளை சமைப்பதன் மூலம் மக்களை மகிழ்விக்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறோம் என்று கூறியிருந்தது.
மேலும், ஆதரவற்றவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவது, உணவு, உடை, கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதே எங்கள் குறிக்கோள் என்றும் தெரிவித்திருந்தனர்.
"நீங்கள் பூமியில் வாழும் வரை மக்களுக்கு உதவுங்கள்" என தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் நாராயண ரெட்டியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இறுதி அஞ்சலி வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
YouTubeல் நாராயண ரெட்டியின் முதல் வீடியோ ஆக.2017ஆம் ஆண்டில் வெளியானது. அதில், 2,000 முட்டைகளை வைத்து அவர் சமைப்பார். அதிலிருந்து அவர், french fries முதல் சிக்கன் பிரியானி, கேக்குகள், donuts என அனைத்து வகையான உணவுகளையும் சமைத்து தனது YouTube சேனலில் பதிவேற்றி வந்தார்.
நாராயண ரெட்டியின் மரணம் குறித்த செய்தி தெரியவந்ததும், உலகெங்கிலும் உள்ள சமூகவலைதள பயனர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது யூடியூப் சேனலில், கிரீஸ், அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவரது பேரன் ஸ்ரீகாந்த் ரெட்டி சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில், நாராயணின் பணிகளைத் தொடரவும், அவரது யூடியூப் சேனலை உயிரோடு வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
Click for more
trending news