This Article is From Dec 05, 2019

'YSR காங்கிரஸ் அமித் ஷாவுக்கு பயப்படுகிறது... நான் அவரை மதிக்கிறேன்' : பவன் கல்யாண்

டெல்லியில் பாஜக தலைவர்களை ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார். இதையடுத்து அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

'YSR காங்கிரஸ் அமித் ஷாவுக்கு பயப்படுகிறது... நான் அவரை மதிக்கிறேன்' : பவன் கல்யாண்

டெல்லியில் பாஜக தலைவர்களை ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார்.

Hyderabad:

ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பயப்படுவதாக நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி, பாஜக மற்றும் தனது ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த ஏப்ரல் - மே தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றியது.

பாஜகவுக்கு தனக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியுள்ள பவன் கல்யாண், தான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில்தான் மாறுபட்டிருப்பதாக கூறியுள்ளார். 'அமித் ஷாவைக் கண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்' என்று பவன் கல்யான் கூறியுள்ளார். 

பவன் கல்யாணின் கருத்துக்கு முன்பு ஆட்சியில் இருந்த தெலுங்கு தேச கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பவன் கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று அக்கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியின் கொள்கையில் எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விஷயம்தான் எங்களை வேறுபடுத்தியது' என்று குறிப்பிட்டுள்ளார். 

பாஜகவின் ஜி.வி.எல். நரசிம்ம ராவும் பவன் கல்யாணின் கருத்தை ஆதரித்து கூறியுள்ளார். 

டெல்லியில் பாஜக தலைவர்களை பவன் கல்யா சந்தித்து பேசினார். இதன்பின்னர் அவரது அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் பவன் கல்யாண் கூறியுள்ளார். 

இந்து கோயில்களுக்கு 23.5 சதவீத வரியை மாநில அரசு விதித்துள்ளது என்பதை கேள்வி எழுப்பியுள்ள அவர், ஹஜ் மற்றும் ஜெரூசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டவர்களுக்கான மானியத்தை மாநில அரசு உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். இதையும் பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது. 

இதேபோன்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சத்துள்ளார். திருப்பதி கோயிலுக்குள் செல்கையில் நம்பிக்கை உறுதிப்பாட்டில் ஜெகன் கையெழுத்திடவில்லை என்றும், அவர் கையெழுத்திடுவார் என்று மற்ற சமூக மக்களும் கூறியதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். 

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார். 
‘என்றுடைய மதத்தையும், சாதியையும் பற்றி மக்கள் சிலர் பேசுவது துரதிருஷ்டவசமானது. மனிதம்தான் எனது மதம். வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பதுதான் எனது சாதி' என்று ஜெகன் மோகன் கூறியுள்ளார். 

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மணல் அள்ளும் கொள்கையையும் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான கட்டுமான பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
இதேபோன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டியும், பவன் கல்யாணும் முரண்பட்டுள்ளனர். ஜனசேனாவின் தலைவர் தாய்மொழியை கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையே பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் உரையில் குறிப்பிட்டார்.

26 வயது மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தையும் பவன் கல்யாண் கண்டித்து பேசியுள்ளார். பெண்களுக்கு எதிராக குற்றச் செயல் செயல்பவர்களை மக்கள் முன்பாக கன்னத்தில் அறைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனை கிண்டல் செய்துள்ள ஆந்திர உள்துறை அமைச்சர் சுச்சாரிதா, இது பவன் கல்யாணின் கோமாளித்தனத்தை காட்டுவதாக கூறியுள்ளார்.

பெண் மருத்தவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சியின் ஜெயா பச்சன், குற்றவாளிகள் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று கூறினார். 


 

.