Read in English
This Article is From May 24, 2019

ஆந்திரா சட்டசபை தேர்தல் : 175-ல் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசத்தல்!!

தேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 50 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படு தோல்வியை சந்தித்திருக்கிறது.

Advertisement
Andhra Pradesh Edited by

தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி

Amaravati:

ஆந்திர சட்டசபை தேர்தல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி அசந்ததலான வெற்றியை பெற்றுள்ளது. 

ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனுடைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டன. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 1 கோடியே 56 லட்சத்து 83 ஆயிரத்து 592 வாக்குகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பதிவான வாக்குகளில் 49.95 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருக்கிறது. ஆளும் தெலுங்கு தேச கட்சிக்கு 23 இடங்கள் கிடைத்துள்ளன.

பிரபல நடிகர் பவண் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு 21 லட்சத்து 30 ஆயிரத்து 367 வாக்குகள் அதாவது 6.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் ஆட்சியமைக்க உள்ளார். 

Advertisement

மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

Advertisement