This Article is From Jun 19, 2020

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்! ஆந்திராவில் அனைத்து இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றி

எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்கள் உள்ளனர்.  ஆனால் அந்த கட்சி நிறுத்திய வர்லா  ராமையாவுக்கு மொத்தம் 17 வாக்குகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்! ஆந்திராவில் அனைத்து இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றி

ஆந்திர சட்டமன்றத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு 38 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

Amaravati:

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆந்திராவில் உள்ள 4 இடங்களிலும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. 

மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் பாஜக 2 இடங்களிலும், ராஜஸ்தானின் 3 இடங்களில் காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

ஆந்திராவை பொறுத்தளவில் மொத்தம் காலியாகியுள்ள 4 இடங்களிலும் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆந்திர சட்டமன்றத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு 38 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட துணை முதல்வர் பில்லி சுபாஷ் சந்திர போஸ், அமைச்சர் மொப்பி தேவி வெங்கட ரமணா, தொழில் அதிபர் பரிமால் நத்வானி, ரியல் எஸ்டேட் அதிபர் அயோத்யா ராமி ரெட்டி ஆகியேர் தலா 38 வாக்குகள் பெற்று மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றனர். 

எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்கள் உள்ளனர்.  ஆனால் அந்த கட்சி நிறுத்திய வர்லா  ராமையாவுக்கு மொத்தம் 17 வாக்குகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.