Read in English
This Article is From Jun 19, 2020

சாஹலிடம் வசமாக மாட்டிய ரோகித்… ஒரேயொரு போட்டோவ வச்சி செய்த களேபரம்!

சிலர் சாஹலின் பதிவிற்கு ரோகித் எப்படி ரியாக்ட் செய்வார் என்பது குறித்தும் வேடிக்கையாக கருத்திட்டனர்.

Advertisement
விசித்திரம் Edited by

சிலர் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களின் போட்டோக்களையும் எடிட் செய்து பதிவிட்டார்கள். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மாவும், அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹலும் கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் பரஸ்பரம் மற்றவர்களைப் பற்றி எதாவது கேலி செய்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது கிரிக்கெட் போட்டிகள் முடங்கியிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார் சாஹல். இந்நிலையில் அவர் ரோகித்தை பெண் போல மார்ஃபிங் செய்து, அதன் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கூடவே அவர், ‘ரோகித் ஷர்மா… நீங்க செம க்யூட்டாக இருக்கிறீர்கள்' என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

FaceApp என்னும் செயலி மூலம்தான் சாஹல் இப்படி வேடிக்கையான போட்டோ எடிட்டை செய்துள்ளார். அவர் மட்டுமல்ல சமீபமாக பல நெட்டிசன்களும் தங்களுக்கு விருப்பமானவர்களின் போட்டோக்களை ஃபேஸ் ஆப் மூலம் எடிட் செய்து பதிவிட்டு ரகளை செய்து வருகின்றனர். ஃபேஸ் ஆப் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும் சமீபத்தில் ஸ்னாப் சாட் மூலம் மீண்டும் பிரபலமாக மாறியது. ஒரு ஆணின் முகத்தைப் பெண்ணைப் போல் மாற்றுவது மட்டுமல்ல, ஒருவர் சிரித்தால் எப்படி இருக்கும், வயதானால் அவர் எப்படி தோற்றமளிப்பார் உள்ளிட்ட பல்வேறு எடிட்களை ஃபேஸ் ஆப்பில் செய்ய முடியும். 

சாஹலின் பதிவுக்கு பல்லாயிரம் லைக்ஸ் குவிந்துள்ளன. பலரும் அவரின் பதிவை ரீ ட்விட் செய்துள்ளனர். பல கிரிக்கெட் ரசிகர்கள் காமெடியான பல கமென்டுகளை பதிவிட்டுள்ளனர். 

Advertisement

சிலர் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களின் போட்டோக்களையும் எடிட் செய்து பதிவிட்டார்கள். 

 

சிலர் சாஹலின் பதிவிற்கு ரோகித் எப்படி ரியாக்ட் செய்வார் என்பது குறித்தும் வேடிக்கையாக கருத்திட்டனர்.

மேலும் சிலர் அடுத்தடுத்த லெவலுக்கு ஃபேஸ் ஆப்பின் பயன்பாட்டை எடுத்துச் சென்றனர். 

ஃபேஸ் ஆப் மூலம் பல நகைச்சுவையான புகைப்படங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. 

Advertisement
Advertisement