Read in English
This Article is From Oct 12, 2018

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 - ஆக உயர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.

Advertisement
இந்தியா

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள்

Jaipur/New Delhi:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் 10 அதிகரித்து 42 - ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேறகொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 170- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017 ஜனவரியில் தான் உணரப்பட்டது.

இதன் பின்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஜூலை மாதத்தில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்புக்கு மத்திய அரசு அதிக கவனம் எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Advertisement