This Article is From Oct 29, 2018

குஜராத்தில் பரவி வரும் ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது

குஜராத்தில் பரவி வரும் ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ் பாதிப்பு கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.

Ahmedabad:

குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் மூலமாக பரவும் இந்த நோய் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 26-ம்தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அகமதாபாத்தில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை பரப்பும் கொசுக்கள் ஜிகா வைரஸை பரப்புகின்றன. கர்ப்பிணிப் பெண்ணை இந்த கொசுக்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்தினால் கருவில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும்.

.