বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 28, 2020

லடாக் சம்பவத்திற்காக தங்கள் சீருடைகளை எரித்த ஜொமாடோ ஊழியர்கள்!

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி ஜொமாடோ 13 சதவிகித ஊழியர்களை அதாவது 520 ஊழியர்களை பணியிலிருந்தது சமீபத்தில் நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

சோமாடோவிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை.

Kolkata:

லடாக்கின் கிழக்குப்பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீன ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள ஜொமாடோ உணவு விநியோக தள ஊழியர்கள் சிலர் நேற்று தங்கள் உத்தியோகபூர்வ சட்டைகளை கிழித்து எரித்துள்ளனர். பெஹாலாவில் நடந்த போராட்டத்தின்போது, ​​அவர்களில் சிலர் சோமாடோவுக்கு கணிசமான சீன முதலீடு இருப்பதால் தாங்கள் வேலையை விட்டு விலகியதாகக் கூறி, நிறுவனம் வழியாக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினர்.

2018 ஆம் ஆண்டில், சீன முக்கிய அலிபாபாவின் ஒரு பகுதியான ஆண்ட் பைனான்சியல், சோமாடோவில் 14.0 சதவீத பங்குகளுக்கு 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது.

"சீன நிறுவனங்கள் இங்கிருந்து லாபம் ஈட்டுகின்றன, நம் நாட்டின் இராணுவத்தைத் தாக்குகின்றன. அவர்கள் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது" என்று எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், “நாங்கள் பட்டிணியுடன் இருந்தாலும் பரவாயில்லை ஆனால், சீன முதலீடு நிறுவனத்தில் வேலை செய்ய மாட்டோம் எனக்கூறியுள்ளார்.

Advertisement

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி ஜொமாடோ 13 சதவிகித ஊழியர்களை அதாவது 520 ஊழியர்களை பணியிலிருந்தது சமீபத்தில் நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜொமாடோ நிறுவனம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

Advertisement
Advertisement