சொமேட்டோ தனது கோல்டு புரோகிரம் திட்டத்தை பல நகரங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ தனது நிறுவனத்தில் பணியாற்றிவந்த வாடிக்கையாளர் சேவை, வணிகர் மற்றும் விநியோக கூட்டாளர் ஆதரவு பிரிவில் பணிபுரிந்த 540 ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது.
இந்த திடீர் நடவடிக்கைக்கு மேம்படுத்தப்பட்ட சொமேட்டோ தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட டிரைவன் போட்கள் மற்றும் வாடிக்கையாளர் கேள்விகளைத் தீர்ப்பதில் ஆட்டோமேஷன் உள்ளிட்ட அம்சங்களே காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 முதல் 4 மாதங்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்களின் பணியை தொழில்நுட்பம் ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 7.5% அளவிற்கு மட்டுமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஊழியர்கள் மூலம் சேவை வழங்கும் தேவை உள்ளது. இது கடந்த மார்ச்சில் 15% ஆக இருந்தது.
இந்த காரணிகள் எங்கள் வாடிக்கையாளர், வணிகர்கள் மற்றும் விநியோக கூட்டாளர்களின் ஆதரவு குழுக்கள் முழுவதும் சில பணிநீக்கங்களுக்கு வழிவகுத்தன என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவு குழுக்களில் 541 பேரை நாங்கள் நீக்கியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.