வாடிக்கையாளர் ஸொமோட்டோ செயலி மூலமாக பனீர் பட்டர் மசாலவை ஆர்டர் செய்திருந்தார் (Representational)
Pune: புனே நுகர்வோர் நீதிமன்றம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸொமோட்டோ நிறுவனத்திற்கு ரூ. 55,000 அபராதம் விதித்துள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ள வழக்கறிஞர் ஒருவருக்கு பனீர் பட்டர் மசாலாவுக்கு பதிலாக பட்டர் சிக்கன் மசாலவை அனுப்பியுள்ளது.
ஊடகத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையின் படி நுகர்வோர் நீதிமன்றம் 45 நாட்களுக்குள் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக் என்பவருக்கு அபராத தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டது. அந்நபருக்கு ஒரு முறையல்ல இரண்டு முறை அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் ஸொமோட்டோ செயலி மூலமாக பனீர் பட்டர் மசாலவை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக பட்டர் சிக்கன் மசாலா அவருக்கு டெலிவரி செய்யப்பட்டிருந்தது. “இரண்டு உணவுகளின் குழம்பு வகையும் ஒரே மாதிரியாக இருப்பதால் அது ஒரு அசைவ உணவு என்பதை அறியாமல் அதை சாப்பிட்டுள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸொமோட்டோவின் கூற்றுப்படி “உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸொமோட்டோ உணவுக்கான தொகையை திருப்பி அளித்தது” தவறான உணவை வழங்கிய உணவகத்தின் மீதும் தவறு உள்ளது என்று நீதிமன்றத்தில் ஸொமோட்டோ தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகம் தனது தவறை ஒப்புக் கொண்டது.
ஸொமோட்டோ மற்றும் உணவகம் இணைந்து சேவை குறைபாட்டிற்காக ரூ. 50,000மும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்காக ரூ. 5,000தொகையும் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டுமென நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)