বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 28, 2018

வரிக்குதிரை வேடத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட கழுதை! நெட்டிசன் கேலி

கழுதையா வரிக்குதிரையா என்று விநோத குழப்பம்.

Advertisement
விசித்திரம்

ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய இப்படம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

கழுதையா வரிக்குதிரையா என்ற சந்தேகம் கொண்ட விலங்கின் புகைப்படம் ஒன்று, எகிப்து மாணவர் முகமது சர்ஹானால் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரல் ஆகியிருக்கிறது. இந்தப் படம் கெய்ரோவின், சர்வதேச தோட்ட விலங்குக் காட்சி சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கழுதையின் உடலில் பெயிண்ட் அடித்து வரிக்குதிரை வேடமிட்டு ஏமாற்றியதாக எழுந்த கிண்டல், குற்றச்சாட்டுகளுக்கு விலங்குக் காட்சி சாலை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாகியிருக்கும் இந்தப் படத்தில், வரிக்குதிரைகளுக்கு வழக்கமாக இருப்பதைவிட பெரிய காதுகளும், வெளிறிய மூக்கும் கொண்ட விலங்கு ஒன்று இருப்பது போல் தெரிகிறது. அதன் முகத்தில் பெயிண்ட் லேசாக அழிந்தது போலவும் இருப்பது மேலும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இதனால் ஃபேஸ்புக்கில் 70,000-க்கும் அதிகமானோரால் இது பகிரப்பட்டுள்ளது. ட்விட்டரில் இது தொடர்பான ஜாலியான விஷயங்களைத் தொகுத்து 'twitter moment'(hyperlink) உருவாக்கப்பட்டுள்ளது.

 
 

Extranews.tv என்னும் உள்ளூர் செய்தி ஊடகத்திடம் சர்ஹான் பேசுகையில், "நான் பார்த்த இடத்தில் இரண்டு விலங்குகள் இருந்தன. இரண்டுமே கருப்பு-வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட கழுதைகள் போல இருந்தன" என்றார். மேலும் இந்தப் புகைப்படம் இத்தனை வைரலாகி இருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் என்.டி.டி.வி-யிடம் கூறினார்.

Advertisement

Extranews.tv - யை தொடர்பு கொண்ட கால்நடை மருத்துவர், 'வரிக்குதிரையின் மூக்கு வழக்கமாக கறுப்பாக இருக்குமென்றும் படத்தில் காணும் விலங்கைப் போல இல்லாமல் அதன் வரிகள் ஒழுங்காக, நேராக இருக்கும்' என்றார்.

எனினும், உள்ளூர் ரேடியோ இது குறித்துக் கேட்டபோது, விலங்குக் காட்சி சாலையின் இயக்குநர், 'நாங்கள் கழுதைக்கு பெயிண்ட் அடித்து ஏமாற்றுவதாக கிளப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை' என்று மறுத்தார். ஆனால் கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள் இதை நம்பியதாகத் தெரியவில்லை.

Advertisement