Read in English
This Article is From Jun 27, 2019

மிருகங்கள் வெயிலை எப்படி சமாளிக்கின்றன..?- பார்த்து தெரிஞ்சுக்கோங்க

பிபிசி செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, ரோமில் இருக்கும் உயிரியல் பூங்காவில், கரடிகள் மற்றும் சில மிருகங்களுக்கு உறையவைக்கப்பட்டப் பழங்கள் ஆகாரமாக கொடுக்கப்படுகிறதாம்.

Advertisement
விசித்திரம் Edited by

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த வாரம் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் அதிக வெயில் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 43 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெயிலைத் தொடர்ந்து அனல் காற்று அடிக்கும் என கணிக்கப்படுகிறது. அந்த அனல் காற்றினால், குடிமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பற்காக பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. பிரான்ஸ் அரசு, பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களை அதிக நேரம் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டு அரசு, இலவசமாக மக்களுக்கு குடிநீர் புட்டி விநியோகித்து வருகிறது. இந்த வெயிலினால் பாதிக்கப்படப் போவது மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களுக்கும், இதனால் பாதிப்பு ஏற்படும். இதைச் சமாளிக்க அப்பகுதியில் இருக்கும் உயிரியல் பூங்கா மிருகங்கள் பல யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளன.

இது குறித்து யூரோ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், வியன்னா உயிரியல் பூங்காவில் இருக்கும் உராங்கூட்டான் விலங்கு, தனது போர்வையை நீரில் நனைத்து, தலை மற்றும் உடலுக்கு மேல் கவசமாக பொத்திக் கொளிகிறதாம். 

இது குறித்து அந்த உயிரியல் பூங்காவின் ஊழியர் ஃப்ரெடி மேயிர், “உராங்கூட்டான்களைப் பொறுத்தவரை, நீர் மூலம்தான் அவைத் தங்களை குளு குளுவென வைத்துக் கொள்ளும். அவைகள் இருக்கும் இடத்தில் பக்கெட் மூலம் நீரை வைக்கிறோம். மேலும், குழாய் மூலமும் அவைகள் இருக்கும் இடத்தில் நீரைப் பீய்ச்சி அடிக்கிறோம். இப்படி செய்வது அவைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது” என்கிறார். 

Advertisement

இதைப்போலவே, பெர்லினில் இருக்கும் உயிரியல் பூங்காவில் யானைகள், சில்லென்று இருக்கும் நீரை தங்கள் மீது வாரி இரைத்துக் கொள்கிறதாம். யானைகளுக்கு குளுகுளுவென நீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பூங்கா நிர்வாகம், ஐஸ் கட்டிகளை நீரில் போடுகிறார்களாம். 

பிபிசி செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, ரோமில் இருக்கும் உயிரியல் பூங்காவில், கரடிகள் மற்றும் சில மிருகங்களுக்கு உறையவைக்கப்பட்டப் பழங்கள் ஆகாரமாக கொடுக்கப்படுகிறதாம். இதன் மூலம் வெயிலை அந்த மிருகங்கள் ஓரளவுக்குச் சமாளித்து வருகின்றனவாம். 

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது சஹாரா பாலைவனத்தில் இருந்து இந்த அனல் காற்று கிளம்பியுள்ளதாம். அதுவே, ஐரோப்பாவை ஒரு கை பார்க்க உள்ளதாம். 

Advertisement