உத்திர பிரதேசத்தின் பரேலியில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அஜாக்கிரதையினால், பிறந்து நான்கு நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது. ஜூன் 15 அன்று பிறந்த இந்த குழந்தை, மூச்சு விட சிரமப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தையுடன் அரசு மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர்கள், சரிவர விசாரிக்கப்படமால் மருத்துவமனையின் வெவ்வேறு கட்டிடங்களுக்கு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். மூன்று மணி நேர அலைக்கழிப்புக்கு பின்னர் அந்த குழந்தை இறந்து போனது.