2 நாள் சுற்றுப் பயணத்தையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமான நிலையத்துக்கு டிரம்ப், தனது மனைவி, மெலனியா டிரம்புடன் வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்க உள்ளார். விமான நிலையத்திலிருந்து அவர் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்திக்குச் செல்கிறார். பின்னர் சுமார் 1 லட்சம் பேர் இருக்கும் மைதானத்துக்குச் செல்கின்றனர் மோடி மற்றும் டிரம்ப். அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட உள்ளன.