கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கும் வலைதள தொடர் ‘குயின்’. திரைப்பட நடிகையும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை பிரதிபலிக்கும் இத்தொடரை ரேஷ்மா கட்டாலா எழுதியுள்ளார். இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், அஞ்சனா ஜெயபிரகாஷ், அனிகா, இந்திரஜித் சுகுமாரன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.