பிரசாரம் செய்ய அசாம் கான், மாயாவதிக்கு தடை

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த 3 நாட்களுக்கும், மாயாவதி அடுத்த 2 நாட்களும் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் தவறு செய்யாமல் இருக்க தேர்தல் ஆணையம், அதன் அதிகாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது, ஜாதி மற்றும் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாதி மற்றும் மத ரீதியாக பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆணையில், யோகி ஆதித்யநாத் எந்த ஒரு பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும் அடுத்த 72 மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாயாவதிக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நாளை முதல் அமலாகிறது.