கொல்கத்தாவில் பாஜகவினர் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு!

அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் அம்மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜகவினர் காவல் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது போலீசாரின் தடுப்பையும் மீறி காவல்துறை தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை கொல்கத்தா போலீசார் கலைத்தனர்.

Related Videos