அரபிக் கடலில் தீவிரமடைந்துள்ள வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்னதாக, அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்தப் புயலின் பாதை சற்றே மாறியிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. அப்போது 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டரை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.