கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். இதனால், அங்கு கடும் பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியது, உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.