பாஜக-வின் மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் இன்று காலமானார். டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டர் மூலம் பதிவு செய்தார்.