சென்னையின் மத்திய பகுதியில், 6 பிணை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையின் கோயம்பேடு அருகே உள்ள ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட இந்த 6 பிணை தொழிலாளர்களில், 2 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் மீது பிணை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் என இரு சட்டங்கள் கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.