பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தீவிரவாத முகாம்களை அழித்து இந்தியா அதிரடி!

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை அழிக்கும் நோக்கில் இன்று அதிகாலை விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே, ‘இந்திய தரப்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாமை அழித்துள்ளது. இதனால் பெரும் அளவிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்றார்.

Related Videos