இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே புராடக்டஸ் பிரைவேட் லிமிடெட் 10,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடும். ஏனெனில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதோடு கிராமப்புற மையப்பகுதிகளில் தேவையும் சரிந்து வருவதால் உற்பத்தியின் அளவை குறைப்பதாக பார்லே நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம் கார் முதல் ஆடைகள் வரை விற்பனை சரிவை எதிர்கொண்டு வருகிறது. உற்பத்தியை குறைக்க நிறுவனங்கள் கட்டாயமாகிவருகிறது. வளர்ச்சியை புதுப்பிக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. “நிலைமை மிகவும் மோசமானது, அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால் வேலைவாய்ப்பு இழப்பு என்பது கட்டாயமாகிவிடும்” என்று அவர் கூறினார்.