தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தேனி மக்களவை தொகுதியில் உள்ள கடையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி மக்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணத்தினை பறிமுதல் செய்தனர். டிடிவியின் ஆதரவாளர்கள் சோதனை செய்யத் தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பணப் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 300 ஆக பிரிக்கப்பட்டு வாக்காளர்கள் பெயர்கள் கவரில் எழுதப்பட்டுள்ளன. சோதனை தொடர்கிறது. என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.