“1996 ஃபார்முலா”- தெற்கிலிருந்து ஒரு பிரதமர்- கே.சி.ஆர்-ன் திட்டம்

தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்), மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வேண்டும் என்ற தனது திட்டத்தை மீண்டும் தூசித் தட்டி எடுத்துள்ளதாக தெரிகிறது. அவர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சென்று சந்தித்து, தனது திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. கே.சி.ஆரின் இந்தத் திட்டம் “1996 ஃபார்முலா” என ஆழைக்கப்படுகிறது. மூன்றாவது அணி கோரிக்கையை முன் வைத்து கே.சி.ஆர், முன்னரே பல பிராந்தியக் கட்சிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர், கே.சி.ஆரை சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கே.சி.ஆரை சந்தித்திருந்த போதும், அவர்களும் ‘மூன்றாவது அணி' திட்டத்துக்கு பிடிகொடுக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் முனைப்பு காட்டி வருகிறார் சந்திரசேகர் ராவ். இது ஒரு புறமிருக்க, கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கே.சி.ஆர் எடுத்துள்ளார். இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ், ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக-வின் பி-டீம்' என்று விமர்சனம் செய்து வருகிறது.

Related Videos