தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கேரள அரசு தமிழகத்திற்கு ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இந்த சலுகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். இந்த செய்தியை கேரள முதல்வர், தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்