வைபவ் நடித்த ‘டாணா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, யோகி பாபு மற்றும் பாண்டியராஜன் நடித்துள்ளனர். கோபம், பயம், பதட்டம், மகிழ்ச்சி என அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாலே தனது குரல் பெண் குரலாக மாறிவிடும் என்கிற மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் வைவப் நடித்திருந்தார். அதையடுத்து, வைபவ் தற்போது ‘லாக்கப்’, ‘காட்டேரி’ மற்றும் ‘ஆலம்பனா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.