கடந்த வாரத்தில், இந்தியாவின் 6 மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஸ்ட்ரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா என இந்த வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் 50 மேற்பட்டோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஹெக்டர் கணக்கிலான விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.