பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்களையும் ராணுவத்தையும், ‘அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் தயாராக இருங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இந்திய தரப்பு நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார் இம்ரான் கான். அப்போது, ‘பாகிஸ்தான், இந்தியாவின் எல்லை மீறலுக்கு தேவைப்பட்ட நேரத்தில் பதிலடி கொடுக்கும்’ என்றார். மேலும் பாகிஸ்தான் தரப்பு, ‘இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை’ என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.