சரிந்த தன்னுடைய இமேஜை தொடர் ஹிட் படங்களால் நிமிரச்செய்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. சமிபத்தில் நமக்கு அளித்த பேட்டியில் ”நான் என் அண்ணன் போலவே படம் இயக்கவே இந்த துறைக்கு வந்தேன் அதற்கான பயிற்சி களமாக உலக நாயகன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தின் துணை இயக்குனராக பணியாற்றினேன் அதன் பின் எதார்த்தமாக நடிக்க வந்தேன் இன்று முழுநேர நடிகனாகவே மாறிவிட்டேன் இருந்தாலும் என்னுடைய மனதில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை உள்ளது அது விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.