இந்திய திரை உலகில் முதல் மியூசிக் கான்சர்ட் திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள 'ஒன் ஹார்ட்', இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் திரை உலக இசை அனுபவங்கள், அவருடைய வாழ்க்கை பற்றி குறிப்புகள், இசைபுயலோடு பணியாற்றிய இசை கலைஞர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளடக்கியுள்ளதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒன் ஹார்ட்' திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.