தயாரிப்பாளர் ஆர்.களஞ்சியம் அவர்களின் மகன் ஆர்.கே.சுரேஷ். நடிப்பு ஆர்வத்தில் இருந்தவருக்கு படத்தை வினியோகிக்கும் வாய்ப்பு சமுத்திரக்கனி மூலம் `சாட்டை' படத்திற்காக வந்தது. பின்பு `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சூதுகவ்வும்', `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களையும் வினியோகம் செய்தார். விஜய் ஆண்டனி நடித்த `சலீம்' படம் மூலம் தயாரிப்பாளர் ஆனவர், பாலா இயக்கிய `தாரை தப்பட்டை' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்தவர் `பில்லா பாண்டி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் பற்றியும் தனது சினிமா பயணம் பற்றியும் இந்தப் பேட்டியில் பல விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.