‘தினகரன் ஒரு பொருட்டே அல்ல..!’- ஓ.பன்னீர் செல்வம்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை NDTV சார்பில் பேட்டி கண்டபோது, ‘தினகரன், இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றுவாரா. உங்களுக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பாரா?’ என்று கேட்டதற்கு, ‘தினகரன் ஒரு பொருட்டே அல்ல. அவர் மொத்த கட்சியையும் ஒரு குடும்பத்திற்குள் எடுத்துச் செல்ல பார்க்கிறார். அதற்கு நாங்கள் எக்காலமும் இடம் கொடுக்க மாட்டோம். அவருக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று கூறினார். தொடர்ந்து அவர், ‘ஒரு அரசு என்பது அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும். யாரையும் பாரபட்சமாக நடத்தக் கூடாது’ என்றார்.

Related Videos