AN 32 விபத்து: உயிருடன் இருப்பவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

முன்னதாக் இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனது. அதை தொடர்ந்து, அதனை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. இந்த விமானம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இன்னிலையில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் இன்று அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிர் தப்பியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.